என் அப்பா

கால் ஆக்ஸிலேட்டர் வரை எட்டாத வயதில் தன் மடியில் அமரவைத்து ஸ்டியரிங் வீலை என்னை பிடிக்க வைத்து கார் ஓட்ட வைத்தார். நான் தான் கடை பூட்ட வேண்டும் என்று கடை வேலை ஆள் பூட்டிய கடையை மறுபடியும் திறந்து என்னை வைத்து பூட்டினர். மூவ்-ஐந்து பருவத்தில் கால் முறிந்து ஸ்கூலில் இருந்த என்னை மூன்று மாடி கீழே தூக்கி வந்தார், எனக்கு கால் கழுவிவிட்டு என்றும் தன் குழந்தைதான் என்று பார்த்துக் கொண்டார். தன் தந்தையின் இன்ஜினியரிங் கனவை நான் அடைந்து நினைவாக்கிய போது அலாதி பெருமிதம் கொண்டார். ஐம்பதுகளில் இருந்து எழுபதுகள் வரை வந்த பல தமிழ் பட பாடல்களின் அர்த்தங்களின் உன்னதத்தை உணர வைத்தார். அதன் பின் இருபத்துஏழு வருடம் கூட வாழாவிட்டாலும் தூர நின்று ஆதரவு தந்தார். வாழ்வியல் பாடங்கள் பல கற்றுத்தந்தார், எனது வளர்ச்சியை கண்டு பெருமை கொண்டார் என் அப்பா. அவர் உள்ளத்தால் தன்மை ஆனவர், குணத்தால் தங்கமானவர், பிரச்சனைகளை கண்டு அஞ்சாதவர், பொறுமையின் சிகரம், நிதானத்தின் மகுடம், சிம்ப்ளிசிட்டிக்கு உதாரணம். ஈசானிய மடத்தில் வ...