"ண", "ன" மற்றும் "ந" ஒரு எளிய விளக்கம்

  "ண", "ன" மற்றும் "ந" ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,  ரெண்டு சுழி “ன” மற்றும் "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் ரெண்டு சுழி "ன" என்பதும்மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம்கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோஅதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல்சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோஅதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது...நினைவில் கொள்க..

மண்டபமாமன்டபமாசந்தேகம் வந்தா...பக்கத்துல 'இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்தான் வரும். ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானாகொண்றானாசந்தேகம் வந்தா...பக்கத்துல 'இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்தான் வரும். ஏன்னா அது "றன்னகரம்"

இதே மாதிரித்தான் 'கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்எழுத்தை அடுத்து வரக்கூடிய உயிர்மெய் 'மட்டுமே. (பந்துவெந்தயம்மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்......

அருமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது. 
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

நன்றி ... வாழ்க வளமுடன்

Comments