ஆசைகள் கோடி
என்னில் அடங்கி இருக்கும் கோடான கோடி ஆசைகள்...ஒரு சிலவை இதோ...
இவ்வுலகம் வசந்த சோலையாக மாற ஆசை
வரட்சி இல்லா பசுமை நிறைய ஆசை
துன்பங்கள் நீங்கி இன்பம் மலர ஆசை
தீமைகள் விலகி நன்மைகள் பெருக ஆசை
யுத்தங்கள் இல்லா உலகில் அமைதி நிலவ ஆசை
கலைகள் கலந்த ஞானம் ஒளிர ஆசை
மனிதருள் நல்நேசம் வளர ஆசை
நோய்கள் இல்லா தேகம் உள்ள ஆசை
காமம் குறைந்த காதல் கனிய ஆசை
ஈருடல் ஓர் உயிராய் வாழ ஆசை
நீங்க காதல் என்னுள் என்றும் சுடர்விட்டு எரிய ஆசை
ஆசைகள் பேராசைகளாக மாறா இருக்க ஆசை
இவ்வாசைகள் இப்பிறவியில் நிறைவேறாவிட்டாலும் இவை நிகழ ஆசை
நான் மீண்டும் பிறவா வரம் வேண்டி ஆசை.
Comments
Post a Comment